Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது விழாவில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் 3ம் இடத்தைப் பெற்று விருதினைப் பெற்றுக் கொண்டது

(மாத்தளையிலிருந்து அஸ்ஹர் இப்றாஹிம் )
தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தின போட்டி நிழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் பெருவிழா கடந்த சனிக்கிழமை மாத்தளை இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ.திஸாநாயக , வட மத்திய மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க , இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ( கண்டி)திரேந்திர சிங் , கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் ,மத்திய மாகாண கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் , மாத்தளை கல்வி வலய கல்வி அதிகாரிகள் , மாத்தளை மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் , இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் , அசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவர்களால் மேடையேற்றப்பட்ட விலுப்பாட்டு நிழ்விற்கும் தேசிய விருது கிடைத்தது.




Post a Comment

0 Comments