Home » » அணுகுமுறைகளை மாற்றும் நேரம் வந்து விட்டது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அணுகுமுறைகளை மாற்றும் நேரம் வந்து விட்டது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி உள்­ளிட்ட அர­சு­ட­னான உற­வு­க­ளில் தாம் இது­வரை பின்­பற்றி வந்த அணு­கு­மு­றை­களை மாற்­று­வ­தற்­கான நேரம் வந்­து­ விட்­ட­து என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரி­வித்­துள்­ளது.
கர­வெட்டி பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்­று தியாக தீபம் திலீ­ப­னின் 31 ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது
தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் 2001ஆம் ஆண்டு நிகழ்த்­திய மாவீ­ரர் தின உரை­யில், உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்­வை­யும் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். இத­னா­லேயே, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது. நாங்­கள் சுய­­­­நிர்­ணய உரி­­­மை­யைக் கொண்­டுள்­ளோம் என்­ப­தைப் பன்­னாட்­டுச் சமூ­கம் ஏற்­றுக் கொண்­டது. ஆனால் தீர்வு கிடைக்­க­ வில்லை. இது­வரை கால­மும் இலங்கைச் சரித்­தி­ரத்­தில் எதி­ரும் புதி­ரு­மாக இருந்த இரண்டு பிர­தான கட்­சி­கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு அர­சாக ஆட்சி செய்­யத் தொடங்­கி­னார்­கள்.
கூட்டு அரசு என்று அவர்­கள் ஒன்று சேர்­வ­தற்­கான கார­ணம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வைக் காண்­ப­தா­கும். வேறு கார­ணம் கிடை­யாது. எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருந்து நாங்­க­ளும் எங்­க­ளின் ஆத­ர­வைக் கொடுத்­தோம். இது எங்­க­ளது மக்­க­ளின் வேணவா. இந்­தத் தடவை இந்த முயற்சி பல­ன­ளிக்­கா­விட்­டால் பெரிய எதிர்­வி­ளைவு ஏற்­ப­டும் என்­ப­த­னை­யும் நாங்­கள் தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தி­ருக்­கின்­றோம்.2000ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அரசு புதிய அர­ச­மைப்பு வரை­வைக் கொண்டு வந்­தது. சிறப்­பான அந்த வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் வெற்­றி­பெற முடி­யா­மல்­போ­னது. இப்­ப­டிப் பல வழி­க­ளில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டா­மல் அல்­லது வாய்ப்­புக்­கிட்ட வந்து தவ­றிப்­போ­னது போன்ற நிலை ஏற்­பட்­டது.
நகல் வரைவு வர முன்­னர் இது வெற்­றி­பெ­றுமா என்ற எண்­ணம் மக்­க­ளி­டம் வந்­துள்­ளது. இதை எப்­படி நம்­பு­வீர்­கள் என்று கேட்­கின்­றார்­கள். நம்­பிக்­கை­யில்­லா­மல் ஒன்­றும் செய்­ய­மு­டி­யாது. மாண­வர்­கள் பரீட்­சை­யில் வெற்­றி­பெ­று­வோம் என்ற நம்­பிக்­கை­யில் பரீட்சை எழு­தி­னால் தான் வெற்­றி­பெ­ற­மு­டி­யும்.
இன்று எமக்கு எதி­ரா­கப் பரப்­புரை செய்­கி­ற­வர்­கள் கூட இது வெற்­றி­ய­ளிக்­காது எனப் பரப்­புரை செய்­கி­றார்­கள். நாங்­கள் எங்­க­ளுக்கு எதி­ரா­கப் பரப்­புரை செய்­ப­வர்­க­ளைக் கேட்­டுக்­கொள்வது என்­ன­வென்­றால் மாற்­று­வழி என்ன? அதனை வெளிப்­ப­டுத்­துங்­கள். வெறும் மேடைப் பேச்­சுக்­க­ளின் மூலமோ, பத்­தி­ரி­கை­க­ளில் அறிக்கை விடு­வ­தன் மூலமோ உணர்ச்­சி­வ­ச­மாக மக்­க­ளைத் தூண்­டும் வகை­யில் செய்­வ­தன் மூலமோ எத­னை­யும் செய்­ய­மு­டி­யாது.
அகிம்சை வழி­யில் உயிர் நீத்த தியாக தீபம் திலீ­பன் வழி­யில் செல்­லப்­போ­கி­றீர்­களா? அத­னை­விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்­கள்? அல்­லது புலி­க­ளால் நடத்­தப்­பட்ட ஆயு­தப் போராட்­டத்­தை­விட பெரிய போராட்­டம் ஒன்றை ஆரம்­பிக்­கத் தயாரா? உலக சரித்­தி­ரத்­திலே எவ­ரும் தொட முடி­யாத, சிக­ரத்­தைத் தொட்ட காலால்­படை, கடற்­படை, வான்­படை எல்­லா­வற்­றை­யும் வைத்­துப் போரா­டிய புலி­க­ளின் போராட்­டத்­தை­வி­டவா நீங்­கள் போரா­டப் போகி­றீர்­கள். அதை மக்­க­ளி­டம் சொல்­ல­வும்.
அப்­ப­டி­யா­னால் உங்­க­ளி­டம் உள்ள மாற்­று­வ­ழி­கள் என்ன? எங்­க­ளின் அணு­கு­மு­றை­யில் மாற்­றம் இருக்க வேண்­டுமா சொல்­லுங்­கள். வெற்­றி­பெற வேண்­டும் என்­ப­து­தான் எங்­கள் இலக்கு. நாங்­கள் தற்­போது அணு­கு­மு­றையை மாற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனென்­றால் இந்த ஆட்சி முடி­யப் போகின்­றது. நாங்­கள் அணு­கு­மு­றையை சற்று மாற்­று­வோம்.
நாட்­டுக்­குள் ஒரு தீர்­வைக் காண்­ப­தற்கு நாட்டு மக்­கள் அனை­வ­ரும் இணங்க வேண்­டும். நாங்­கள் ஒன்­றும் நியா­ய­மற்­ற­தைக் கேட்­க­வில்லை என்­பதை அவர்­கள் உண­ர­வேண்­டும். அவர்­கள் சந்­தே­கப்­ப­டும் வித­த்­தில் மாற்­று­வழி பற்­றிப் பேசு­வோர் செயற்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் சந்­தே­கப்­பட்­டால் எமது இலக்கை அடை­வது கடி­னம்.
அதற்­காக பொய் சொல்ல வேண்­டும் என்ற அவ­சி­யம் இல்லை. நாங்­கள் என்ன விதத்­தில் பேசு­கின்­றோம், எப்­ப­டிப் பேசு­கின்­றோம் என்­ப­தில்­தான் அது தங்­கி­யி­ருக்­கின்­றது.பேச்­சுக்­கான இந்த அணு­கு­மு­றை­க­ளைக் கையா­ளும்­போது உடனே அவர் விலை­போய்­விட்­டார் எனச் சொல்­கி­றார்­கள். இது இல­கு­ வா­கச் சொல்­கின்ற வார்த்தை. எல்லா ஆயு­தங்­க­ளும் இருந்­தும் கூட பெறப்­பட முடி­யா­ததை ஒரு ஆயு­த­மும் இல்­லா­மல் அவர்­க­ளு­டன் முட்டி மோதிப் பெற­மு­டி­யுமா? மாற்று அணு­கு­மு­றை­களை வைத்­துள்­ளார்­கள் இத­னைச் சொல்­ல­வேண்­டும்.
இப்­போது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஆத­ரவு எமது பக்­கம் உள்­ளது. ஆயு­தப் போராட்ட காலத்­தில் புலி­களை அந்த நாடு­கள் தடை­செய்­தி­ருந்­தன. அவர்­க­ளின் மன­தில் நாங்­கள் பொறுப்­பற்­ற­வர்­கள் என்ற எண்­ணம் வரக்­கூ­டாது.சாதா­ர­ண­மாக இலக்கை அடைய சமூ­கத்­தில் பின்­பற்ற வேண்­டிய முறை­கள் இருக்­கின்­றன. அவற்றை நாங்­கள் பின்­பற்­ற­வேண்­டும். இந்த நாட்­டில் பெரும்­பான்மை இனத்­தின் எதிர்ப்­பைச் சம்­பா­தித்து எமது இலக்கை நிறை­வேற்ற முடி­யாது. ஆனால் சம­ர­ச­மா­கப் பேசி அத­னைச் செய்ய முடி­யும்.
அந்­தப் பக்­கு­வம் எங்­கள் மக்­கள் மன­தில் இருக்­க­வேண்­டும். அது எமது மக்­க­ளி­டம் இருக்­கி­றது. அதை இல்­லா­மல் செய்­யும் பரப்­பு­ரையை அனு­ம­திக்க முடி­யாது. அந்­தப் பொறுப்­பற்ற பரப்­பு­ரையை முறி­ய­டிக்­க­வேண்­டி­யது இளை­ஞர்­க­ளின் கைக­ளி­லேயே இருக்­கி­றது என்­றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |