Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் யானை தாக்கி மரணம் ஊரே அதிர்ச்சியில் !!!

தங்களுடைய வளர்ப்பு ஆடு இரு கன்றுகள் ஈன்று 20 நாட்களாகின்றது. ஆனால் இரு கன்றுக் குட்டிகளுக்கும் பால் கொடுக்க தாய் ஆடு மறுத்ததால் குட்டிகள் பசியால் மடிந்துவிடுமே என எண்ணி தினமும் 05 கிலோமீற்றர் தூரம் சென்று மாட்டு பட்டியடியில் பால் வாங்கி வந்து குட்டிகளுக்கு கொடுத்துவரும் இளைஞனை இன்று யானை தாக்கியதில் பலியான சோகம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் (வயது 24) நேற்றுக் காலை கோப்பாவெளியில் உள்ள தனது பட்டியடியில் இருந்து வழமை போன்று இரு ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் வேண்டுவதற்காக தனது பாதையை சுருக்கி காட்டுவழியால் சென்று (02Km) பட்டியடியில் பால்வாங்கிவர சென்ற போது காடுகளைகடந்து வெளியேறும் பாதையில் நின்ற யானையொன்றினால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியாகியுள்ளான்.
இளைஞனின் தலைப்பகுதி முற்றாக சேதமடைந்து மரணம் சம்பவித்திருந்தது.
இது குறித்த விசாரணைகளை கரடியணாறு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் யானைகளின் நடமாற்றம் அதிகரித்துள்ளதுடன் யானை தாக்கி பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்த மாதத்தில் மட்டும் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனம் எடுக்காது இருப்பது ஏன்? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.



Post a Comment

0 Comments