Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹைபிரட்” வாகன வரிகள் அதிகரிப்பு


எஞ்சின் வலு 1000 CC யிலும் குறைந்த வலுவுடைய மோட்டார் வாகனங்களுக்குறிய தயாரிப்பு வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்வகையான வாகனங்களுக்கான தயாரிப்பு வரி 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான மின் சக்தியிலும் இயங்கக் கூடிய ஹைப்ரிட் வகை வாகனங்களின் தயாரிப்பு வரி 1,250,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2018 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுமதிபெற்ற வாகனங்களுக்கு இந்த வரி ஏற்புடையதாகாது.

இந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் முன்பிருந்த எஞ்சின் வலுவின் அடிப்படையிலான தயாரிப்பு வரிக்கு உற்பட்டதாக இருக்கும் . என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments