Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை!

பாதாகைகளில் சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகளில் தமிழ் முதலில் இடம்பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன்-
"வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, அப்பகுதியில் பாதாகைகளைக் காட்சிப்படுத்தும் போது, அவற்றில் முதலில் தமிழில் எழுவது தவறில்லை. சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், முதலில் சிங்கள மொழியில் எழுதலாம். எமது நாட்டில் தமிழ், சிங்களம் என்ற இரண்டுமே, அரச கரும மொழிகளாகும். அதனால் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டமும் எங்கும் இல்லை. குறிப்பாக, நயினாதீவு என்பதை மொழி மாற்றம் என்ற பெயரில், 'நாகதீபய' என்று கூறவும் முடியாது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments