Home » » பாண்டிருப்பு உபதபால் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைக்கமாறு கோரிக்கை

பாண்டிருப்பு உபதபால் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைக்கமாறு கோரிக்கை

செ.துஜியந்தன்


பாண்டிருப்பு கிராமத்தில் இயங்கிவரும் உபதபால் நிலையத்திற்கு நிரந்தரக்
கட்டிடம் ஒன்றை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்குமாறு பாண்டிருப்ப கிராம
மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
பாண்டிருப்பில் கடந்த 45 வருட காலமாக உபதபால் நிலையம் இயங்கிவருகின்றது.
இதற்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்படாமையினால் இன்று வரை பல்வேறு
இடங்களிலும் வாடகை கட்டிடத்திலே இயங்கிவருகின்றது. 2500 இற்கும் மேற்பட்ட
குடும்பங்களுக்கு தபால் சேவையினை வழங்கிவரும் இந் நிலையத்திற்கு அடிப்படை
வசதிகள் எதுவும் மற்ற நிலையிலுள்ளது.
கடிதங்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கான அலுமாரிகள் இங்கு முதியோர்
கொடுப்பனவு பெறவருகின்றவர்கள் அமர்வதற்கான கதிரைகள், தொலைநகல், ஈமெயில்
வசதிகள் என எதுவித வசதிகளுமற்ற நிலையிலே பாண்டிருப்பு உபதபால் நிலையம்
கடந்த 45 வருடங்களாக இயங்கிவருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதிலும் எதுவித
நடவடிக்கையும் எடுக்கப்டாதுள்ளது. பாண்டிருப்பு உபதபால் நிலையத்திற்கு
நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு இங்குள்ள மேட்டைவட்டை
வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் பகுதியில் சிறியதொரு
காணியினைப் பெற்று நிரந்தரக்கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்டவர்கள்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பும்
கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |