Advertisement

Responsive Advertisement

எருவில் விபத்தில் காயமடைந்த குடும்பப்பெண் உயிரிழப்பு

செ.துஜியந்தன் 

எருவில் விபத்தில் காயமடைந்த குடும்பப்பெண் உயிரிழப்பு

கடந்த மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எருவில் வாட்றோட்டில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த இராசதுரை ஆனந்தகீதா(31வயது) நேற்று பி.ப 3மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் உயிரிழப்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் தனது கணவன், பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது வான் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றது. இவ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த பெண்ணும் அவரது கணவன் அ.றஜனிகாந்தன்(31வயது), ர.லிதர்சனா(07வயது)  ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒன்பது தினங்களாக சிகிச்சைபெற்றுவந்த ஆனந்தகீதா சிகிச்சைபலனின்றி நேற்று உயிரிழந்தார். தற்போது இவரது கணவர் சுயநினைவிழந்தவராகவுள்ளார். ஏழு வயது சிறுமி கால் முறிந்த நிலையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments