Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

20க்கு இதுவரை 73 பேர் எதிர்ப்பு


நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு இதுவரை 73 எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்படி இந்த யோசனை வெற்றியளிப்பது சந்தேகத்திற்குறியதாக மாறியுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் 150 பேரின் ஆதரவு அவசியமானது ஆனால் 76 பேர் அதனை எதிர்பார்களாக இருந்தால் அது தோற்கடிக்கப்படும். இந்நிலையில் தற்போது வரை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 73 பேர் எதிர்ப்பதாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments