Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் ராஜித , வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு


அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மைகளை ஆராயும் அமைப்பினால் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் நினைவு நிகழ்வகளை நடத்துவதில் தவறில்லையெனவும் மற்றும் இராணுவத்தினரால் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் ராஜிதசேனாரட்னவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கு எதிராகவும் அத்தோடு வட மாகாண பாடசாலைகளில் நேற்றைய தினம் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments