Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வாள்வெட்டில் படுகாயம்! - இன்று அதிகாலை பயங்கரம்

யாழ்ப்பாணத்தில், ஊடகவியலாளர் ஒருவர் இன்று அதிகாலை வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை- துண்டிப் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவரே காயமடைந்துள்ளார்.
காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக சென்ற போது, 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்டவர்கள் கோடரி மற்றும் வாள்களினால் சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிருடன் விட்டால் தப்பு என்றும் வயரினாலும் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 3 பிள்ளைகளின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments