Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன- சி.வி.விக்னேஸ்வரன்


வறிய மாணவர்களுக்க சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சியிலுள்ள அறம் செய் அறக்கட்டளை நிலைய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே,தமிழர்களின் பாரம்பரிய நிலங்களையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வன்னிப் பிராந்தியத்தில், தமிழர்களின் குடியிருப்புகள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.ஆனால் நாமோ எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம் என தெரிவித்தார்.(15)

Post a Comment

0 Comments