Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனைத் தமிழர்களின் தனித்துவத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கும்!

கல்முனை மாநகர சபைக்கான முதல்வர் தெரிவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
சார்பில் முன்னாள் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குலசேகரம்
மகேந்திரன் போட்டியிட்டிருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏழு
உறுப்பினர்கள் மாத்திரம் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இந் நிலையில் பிரதி
முதல்வர் தெரிவுக்கும் கூட்டமைப்பின் சார்பில் க.சிவலிங்கம்
போட்டியிட்டிருந்தார். அவரும் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே
வாக்களித்திருந்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கல்முனை மாநகர
சபையின் உறுப்பினர் குலசேகரம் மகேந்திரன் கருத்து தெரிவிக்கையில் …
நாம் தோற்போம் என்று தெரிந்தும் கல்முனைத் தமிழர்களின் தனித்துவத்தை
காப்பாற்றவே தமிழத்தேசியக் கூட்டமைப்பு தனித்து முதல்வர் பதவிக்காக
போட்டியிட்டது. நாம் யாருக்காகவும் சோரம் போபவர்களல்லர். ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்சுடன் நாம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து
பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதற்கான சதகமான பதில் எதுவும் கடைசி
வரை கிடைக்கவில்லை.
கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தொடர்பாகவும்,
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கொடுக்கப்பட்டால் கல்முனைப்
பிரதேசத்தை மூன்று கூறுகளாக பிரித்து சபைகளை உருவாக்குவதை
நிறுத்தவேண்டும் அல்லது கல்முனைத் தமிழர்களுக்கென தனியான ஒரு நகர சபையை
அல்லது பிரதேச சபையை வழங்குவதற்கு ஆதரவு வழங்கவேண்டும், கல்முனை நகர
அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் நெற்காணிகளை
சுவிகரிப்பதை நிறுத்துவதுடன் கல்முனைத் தமிழர்களின் செறிவைக்
குறைப்பதற்கான முயற்சிகளை கைவிட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை
வைத்தோம். அது தொடர்பாக எதுவித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. இதனால்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது தனித்துவத்தை காக்கும் வகையில்
இயங்குவது என முடிவெடுத்தோம்.
இன்று கல்முனையில் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி
றக்கீப், பிரதி முதல்வராக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்
காத்தமுத்து கணேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் ஒரு தமிழரும்,
முஸ்லிமும் தெரிவாகியுள்ளனர் என்பதற்காக கல்முனைவாழ் தமிழ் முஸ்லிம்
மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து விடும் ஜக்கியம்
ஏற்பட்டுவிடும் எனக்கூற முடியாது. இவர்களின் நான்கு வருட ஆட்சியை
வைத்துத்தான் பிரதேசத்தின் நிலமையினைக் கூறமுடியும். அது வரை
பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments