Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊடகவியலாளர் கடத்தல் வழக்கில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது!


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் கல்கிஸ்ஸ நீதிவானுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி கடத்தப்பட்டார்.சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments