Home » » விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வெலின் கப்பல் நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வெலின் கப்பல் நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு


விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வெலின் அல்லது ஏ 522 என கப்பல் இன்று நீர்கொழும்புக்கு அண்மித்த ஆழ் கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டன. கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.
புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வெலின் எனும் இந்த கப்பலானது புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த அதன் சர்வதேச தலைவராக செயற்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில், கே.பி. கைதான பின்னர் அக்கப்பலானது இந்தோனேஷியாவில் இருந்து கடற்படையினரால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வெலின் கப்பல் ஏ 522 எனும் பெயரிலும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டது. பல வருடங்கள் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட குறித்த கப்பல், பயன்படுத்த முடியாத நிலைமையை அடைந்துள்ள நிலையில் அக்கப்பலை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அக்கப்பலை கொள்வனவு செய்ய குறைந்த பட்ச ஏலத்தொகைக்கு கூட எவரும் கோராத நிலையில் கப்பலை அழிக்க தீர்மானிக்கப்பட்டு, அதுவும் ஆழ் கடலுக்கு இரு விஷேட கப்பல்களின் உதவியுடன் இழுத்து செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. பயன்பாட்டு நிலைமையால் இல்லாத இந்த கப்பலானது ரங்கல கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு ஆழ் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.(15)
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
ltte-ship-sunk-260318-seithy (1)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |