நேற்று நடைபெற்ற நிதாஹஸ்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்,"பேட்டிங் செய்ய சுலபமாக இல்லை. நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் இருந்தேன். ஏற்கனவே நான் பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.
அந்த பயிற்சி அதிர்ஷ்டவசமாக இன்று கைகொடுத்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம், அந்த வாய்ப்பை நழுவவிட்டு விடக் கூடாது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி", என்று கூறினார்.
0 Comments