Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் ; இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்


2018ம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு அமைவாக, விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவுளளது.

இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஜயந்தி விஜேதுங்க தெரிவிக்கையில்

2016ம் ஆண்டில், கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரிக் கற்கை நெறியைத் தொடர்வதற்காக இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர் அறிவிடப்படும். பட்டதாரிக் கற்கை நெறிகளைப் பூர்;த்தி செய்து தொழிலில் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்தக் கடனைச் செலுத்த முடியும். 5 ஆயிரம் மாணவர்களை இந்தக் கடன் திட்டத்தின் கீழ் உள்வாங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகம் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், கற்கை நெறிகளைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இதற்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஜயந்தி விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments