அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி வரி சலுகை நிறுத்தப்பட்டதற்கும் ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளிக்கையில் விளக்கமளித்தனர்.
மத்திய கிழக்கு விஜயம் தொடர்பில் பண்டாரநாயக்க காலம் முதல் அரசாங்கம் அணிசேராக்கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது.
இதனடிப்படையிலேயே சமகால நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலம்; தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு இலங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
128 நாடுகளில் 120 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்தன. இலங்கையும் இவ்வாறே செயற்பட்டது.
எனவே மத்திய கிழக்கு தொடர்பாக வழமையான அணிசேரா கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த யுஎன்பி அரசாங்கமும் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்று டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.


0 Comments