உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டைகளை பெற முடியும் என மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்களின்போது வாக்குகளை அளிப்பதற்காக ஆளடையாளத்தை உறுதிப்படுத்தல் அத்தியாவசியமானதாகும். இதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுப்படியான சாரதி அனுமதிப் பத்திரம், ஓய்வூதியர் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை என்பவற்றை பயன்னடுத்த முடியும்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய மேற் சொன்ன ஆவணங்கள் இல்லாதவர்கள் கிராம அலுவலர் ஊடகாக தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தேவைப்படுவோர் தமது பகுதி கிராம அலுவலர் ஊடாக அதனைப் பெறுவதன் மூலம் வாக்களிக்க முடியும் எனத் தெரிவித்தார்.


0 Comments