|
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்து வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
|
இதற்காக, ‘லங்கா லொஜஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தகவல்க பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வேட்டைக்காக பயன்படுத்தும் இந்த வகை ஆயுதத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
|


0 Comments