|
கொழும்பில் வசிக்கும் தமிழ் பெண்களிடமிருந்து மிகச் சூட்சுமமான முறையில் கொள்ளையடிப்புக்கள் இடம்பெற்றுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழ் பெண்களின் நகைகளே இவ்வாறு சூட்சுமமான முறையில் கொள்ளையடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு குழுவாகச் செயற்படும் இந்தக் கொள்ளைக்கூட்டம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம், குறிப்பாக தாலி உள்ளிட்ட நகைகள் மற்றும் பணப்பை அணிந்து செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையினைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இந்தக் கள்ளக் கூட்டமானது ஒருவரைக் கொள்ளையடிக்க வைத்துவிட்டு அவரைத் துரத்திப் பிடிப்பதுபோல் பின்னால் ஓடிச் சென்று தலைமறைவாகிவருவதாக சொல்லப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான சம்பவங்களின்போது பணத்தினையும் நகைகளையும் இழந்த பல பெண்கள் மேற்படி பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
|


0 Comments