( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
கல்முனை மாநகரசபைக்கான உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பாக சுயேற்சைக்குழுவில் தோடம்பழச் சின்னத்தில் 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் தனது வட்டாரத்தில் தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவும் பொதுக்கூட்டமும் சுயேற்சைக்குழுவில் தோடம்பழச் சின்னத்தில் 22 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் தேர்தல் அலுவலகத்திறப்பு விழாவும் இன்று இடம்பெற்றன.
மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் அலுவலங்களைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ்
வை.எம்.ஹனீபா ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட் ஓய்வுபெற்ற சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை அல்ஹாஜ் மௌலவி எம்.எஸ்.எம்.நுஹ்மான் சுயேட்சைக்குவேட்பாளர்களான ஏ.ஆர்.எம்.அஸீம் மற்றும் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் ஆகியோர் உரையாற்றினார்கள்.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த அதிக அளவிலான ஆதரவாளர்களும் ஊர் பிரமுகர்களும் உலமாக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






0 Comments