வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments