2017ம் ஆண்டில் மோட்டார் வாகன பதிவுகள் 45,000 இனால் குறைந்துள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டில் 448,625 வாகனங்கள் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் 76 வீதமானவை மோட்டார் சைக்கிள்கள் எனவும் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் 2016ம் ஆண்டில் 493,328 வாகனங்கள் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் 39098 மோட்டார் கார்களும், 3302 பஸ் வண்டிகளும் அடங்குவதாகவும் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments