Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களை PHDTஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டப்பகுதி மக்கள் உடனடியாக பிராந்திய ட்ரஸ்ட் Plantation Human Development Trust (PHDT) நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
காலநிலை காரணமாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்தாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், மக்கள் தமது பிரதேசத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனமான ட்ரஸ்ட் நிறுவன காரியாலயங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தமது சேத விபரங்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பெருந்தோட்ட சமூக தொடர்பாடல்உதவியாளர்கள் மற்றும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களும் அமைச்சரின் பிரதேச இணைப்பாளர்களும்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்
இதே வேளை சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் இதனால் சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததில் நோர்வூட் பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதில் 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலும்இ சிங்கள மகா வித்தியாலயத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல செல்வகந்தஇ ஆரியபுரஇ பொகவானஇ குயினாஇ ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய கடும் காற்றினால் 200 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (பிரதான அலுவலகம்)
பத்தரமுல்ல தொலைபேசி: +94 112 887 497-500

Post a Comment

0 Comments