கொட்டாவ, ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நேற்று இரவு உள்நுழைந்த இனம் தெரியாத இரண்டு பேர் குறித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் கொலை நிகழ்ந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments