Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச வங்கியில் கொள்ளை முயற்சி; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

அகங்கம பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட வந்த கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையிட வந்த ஒருவர் படுகாயமடைந்து காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் 1.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவருடன் வந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments