Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஒரு தொகை கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இருந்து ஒரு தொகை கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை பிற்பகல் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவற்கொடிச்சேனை பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
தகர ரவுண்ஸ் ரின் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் 18 கைக்குண்டுகள் இவ்வாறு மீட்டக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.எம.பி.ஜெயகளும் தெரிவித்தார்.
முன்னர் விடுதலைப்புலிகளின் முகாமாக இருந்து கைவிடப்பட்ட காணியொன்றிலேயே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பினை கருத்தில்கொண்டு விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பின் பணிப்புரையின் கீழும் கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படையின் வலய கமாண்டர் எம்.பி.ஜி.ரத்பிட்டியவின் வழிகாட்டலில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவினைப்பெற்று நாளை செவ்வாய்க்கிழமை குறித்த கைக்குண்டுகள் செயழிலக்கச்செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
DSC04677DSC04679DSC04681

Post a Comment

0 Comments