Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணியுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை –பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். இதுமிகவும் வேடிக்கையைதந்தது.
கிழக்குமாகாணத்தில் மக்களை நோசித்து சேவைபுரியும் எந்தபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியுடனும் ,சமுகஆர்வலர்களுடனும் உள்@ராட்சிமன்றத் தேர்தலில் ஒரேகுடையின் கீழ் போட்டியிடுவதற்கு அழைப்புவிடுத்திருந்தது.
கட்சியின் செயலாளராகியநானேநான் மட்டக்களப்புவாவிக்கரைவீதியில் அமைந்துள்ளஎமதுகட்சியின் தலைமைக் காரியாலயத்திலேயே இருக்கின்றேன்.
ஆனால் வி.கமலதாஸ் எம்முடன் எந்தவிதமானதொடர்புகளையும் மேற்கொள்ளாது சிறைச்சாலையில் இருக்கும் தலைவருடன் பேச்சுக்குச் சென்றாதாகவும் அவர்மறுத்ததாகவும் ஊடகங்கள் வாயிலாகஅவர் அறிக்கையிட்டதனைநாம் அறிந்தோம்.
இது தொடர்பாக கடந்த 2 வருடங்களாக மட்டக்களப்புசிறைச்சாலைதடுப்புக் காவலில் உள்ள எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனிடம் நாம் 27.11.2017ம் திகதிசென்றுவினாவியபோது, குறித்த வி.கமலதாஸ் தன்னைமுன்புஓரிருதடவைகள் பார்வையிடவந்துள்ளதாகவும் அதேபோன்று பார்வையிடுவதற்காக வழமையாக பார்வையாளர்கள் பார்வையிடும் விதிமுறைகளுக்கு ஏற்ப பார்வையிட வந்ததாகவும் தன்னிடம் நட்புரீதியாக ஸ்ரீகலந்துரையாடியதாகவும் அரசியல் ரீதியாகவோஉள்@ராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாகவோ எந்தகருத்துக்களும் பரிமாறப்படவில்லை எனவும் குறிப்பிட்ட தலைவர்தானே கருணாஅம்மான் எப்படி இருக்கிறார் அவருடனான உங்கள் கட்சி எப்படி மக்கள் முன்வாக்குகேட்கப்போகிறது என மட்டுமே கதைத்தேன் எனக்குறிப்பிட்டார்.
இவ்வாறானஉன்மைக்குப்புறம்பானதகவல்களைதமதுவிளம்பரப்படுத்தலுக்காகமேற்கொள்வதுகண்டிக்கத்தக்கது எனவும் இவ்வாறான போலிச்செயற்பாடுகள் இன்னும் முன்னெடுக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் தலைவர் சி.சந்திரகாந்தன் பணித்துள்ளார் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments