Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்தின் அடிவருடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு-முன்னாள் பிரதியமைச்சர்

அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்துகொண்டு எந்தவித நன்மையினையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியில் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இன்று திங்கட்கிழமை உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் கட்டுப்பணத்தினை செலுத்தின.இன்று கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதியான தினம் என்ற காரணத்தினால் பல்வேறு கட்சிகள் தங்களது கட்டுப்பணத்தினை செலுத்தியது.
தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணி இம்முறை கிழக்கு மாகாணத்தில் சுயேட்சைக்குழுவாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியில் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,தேர்தல் திணைக்களத்தில் இன்று ஆதரவாளர்களுடன் வருகைதந்து கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இம்முறை சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;த்த அவர்,
கிராமங்களை ஒன்றிணைத்து சுயேட்சையாக போட்டியிடுவதற்கு நாங்கள் இம்முறை தீர்மானித்துள்ளோம்.சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்துள்ளோம்.நாங்கள் வெற்றிபெறுவோம்.
கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை நோக்காக கொண்டு நாங்கள் இந்த உள்ளுராட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிவருகின்றனர்.
இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியுள்ளோம். திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பற்றையிலும் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.அதேபோன்று கல்முனையிலும் காரைதீவிருலுலும் எந்தவித அரசியல் கட்சியும் இல்லாமல் சுயாதீனமாக இறங்கியுள்ளோம்.எல்லைக்கிராம மக்களின் பாதுகாப்பினை கருதி அவ்வாறான ஆலோசனைகளை வழங்கி சுயாதீனமாக இறக்கப்பட்டுள்ளது.பல பிரதேசசபைகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையுறுதியாகவுள்ளது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடங்கள் ஆரம்பித்துளள் நிலையில் அதனை தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.இன்றை நிலைமையினை கருத்தில்கொண்டு சிறந்த தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று தீர்மானம் எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையினை காணமுடிகின்றது.பலர் வெளியேறுவதும் வருவதுமாக இன்று அரசியல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோன்று இன்று பல கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துவெளியேறி தமிழர் விடுதலைக்கூட்டணி என அமைத்துள்ளனர்.இவர்கள் எல்லாம்வெறும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பாராளுமன்றத்தில் இருந்தும் எதனையும் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்துகொண்டு எந்தவித நன்மையினையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.மாறாக முஸ’லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு தமிழ் பகுதிகளில் அதிகரித்துள்ளது.இவற்றுக்கெல்லாம் பதிலடியொன்று வழங்கவேண்டும் என்பதற்காகவே துணிந்து களத்தில் இறங்கியுள்ளோம்.
DSC04147DSC04156

Post a Comment

0 Comments