|
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்து காபந்து அரசாங்கம் ஒன்றை உருவாக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள வார இறுதி பத்திரியொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
|
“எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து காபந்து அரசாங்கமொன்றை நிறுவக்கூடிய சாத்தியம் உண்டு.
இரண்டு நிபந்தனைகளை மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டால் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாது காபந்து அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார். சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவிகளை துறக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட காரணத்தினால் இந்த நிலைமை கூட்டமைப்பு சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது போனது.
பிரதமர் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினரை நீக்கி விட்டு காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் இணக்கப்பாட்டுக்கு அமைய எந்தவொரு நபரையும் பிரதமராக நியமிக்க முடியும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
|


0 Comments