|
வடமராட்சி - புலோலி மந்திகைப் பகுதியில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் குழுவினரால் இன்று அதிகாலை 31 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மூடியவாறு வீட்டின் சமையல் அறை புகைக்கூட்டியின் வழியாக உள்நுழைந்தே திருடா்கள் இந்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. 65 வயது மதிக்கத்தக்க கணவன் ,மனைவியை கத்தியைக்காட்டி மிரட்டி நகையினை கொள்ளையிட்டு சென்றுள்ளன.
|
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.ப ருத்தித்தறை பொலிசார் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|


0 Comments