Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி எடுக்கப்போகும் முக்கிய தீர்மானங்கள்? : அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம்!

பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் தீர்மானம் மிக்க முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த தீர்மானங்களால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் மற்றும் அரசியல் ரீதியிலும் கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டு அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கடுமையான தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியையும் இணைக்கும் முயற்சிகள் ஜனாதிபதியின் ஆதரவுடன் இடம்பெற்ற போதும் அது தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்த நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தேர்தலில் வெற்றிப் பெறச் செய்வதற்கான பொறுப்பு ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments