தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இனவாதம் மற்றும் மதவாத தூண்டல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்


0 Comments