Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

கிழக்கு மாகாணத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா  வெள்ளிக்கிழமை மாலை (01.12.2017 )வெகுவிமர்சையாக நடைபெற்றது.மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் மைக்கேல் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சி கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் எஸ்.ஜேசுதாசன் அடிகளார்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மைக்கேல் கல்லூரியின் லண்டன பழைய மாணவர் கிளையின் தலைவர் எஸ்.சுரேஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்ப பிரிவு தொடக்கம் உயர்தரப்பிரிவு வரையில் பாடவிதானங்களில் சிறப்புக்காட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் உயர்தரம்,ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்,மாகாண,தேசிய மட்ட சாதனை படைத்தவர்கள்,பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
DSC02417DSC02426DSC02429DSC02441DSC02445DSC02449DSC02569DSC02583DSC02605

Post a Comment

0 Comments