Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

”ஒகி” போக ”சாகர்” வருகிறது : 5ஆம் திகதிக்கு பின் இலங்கையை தாக்கும்

அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் தீவிரமடைந்து வருவதால் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு உருவாகியுள்ள இந்த புயலுக்கு சாகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தமான் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்தம், புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதன் நகர்வு எப்படி இருக்குமென இப்போதைக்கு எதனையும் கூற முடியாதிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாறி இலங்கையின் வடக்குப் பகுதியில் வரும் 5ஆம் திகதி தாக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை , ஓக்கி புயலின் தாக்கத்தினால் தொடர்ந்து கொட்டி வந்த மழை, குறையும் என்றும், வடக்கு, கிழக்கு, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாத்திரம், 100 மி.மீ வரையான மழை பெய்வதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments