Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பலியானோர் தொகை 13 ஆக அதிகரிப்பு - 56 பேர் காயம்!

ஓகி புயலினால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து பேர் காணாமற்போயுள்ளனர் என்றும், 56 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பாதுகாப்பான 30 தற்காலிக வசிப்பிடங்களில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 509 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments