Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வளிமண்டல தாழமுக்கம் ; கடும் மழை பெய்யும்

நாட்டுக்கு அருகாமையில் தற்போது நிலவும் வளிமண்டல தாழமுக்கம் காரணமாக நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வானம் முகில் கூட்டம் நிறைந்ததாக காணப்படும். நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் விசேடமாக மேற்கு தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 75மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பனிமூட்டத்துடனான காலநிலையை எதிர்பார்க்ககூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் .இடிமின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.-

Post a Comment

0 Comments