கலேவெல பகுதியில் மறைவான இடமொன்றில் பவுசரை நிறுத்தி பவுசருக்குள் இருக்கும் ஒரு தொகை பெற்றோலை வெளியே எடுத்து அதற்கு ஏற்றால் போல் மண்ணெண்ணையை அதனுடன் கலக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அந்த பவுசருடன் அதன் சாரதி , உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த இடத்திலிருந்து பெற்றோலுடன் மண்ணெண்ணையை கலக்க பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பவுசர் திருகோணமலையை சேர்ந்த ஐ.தே.க எம்.பியொருவருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தனக்கும் குறித்த சம்பவத்திற்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது என அந்த எம்.பி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது


0 Comments