தென்னாபிரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின்போதே பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டார் என பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஹதுருசிங்க இது குறித்து பங்களாதேஸ் கட்டுப்பாட்டுச்சபையுடன பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிற்கு முன்பதாக அவர் என்னிடம் இராஜினாமா கடிதத்தை வழங்கினார் ஆனால் அதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை என்றும் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் அனைத்து தொடர்பாடல்களையும் அவர் நிறுத்திவிட்டார் எனவும் ஹசன் தெரிவித்துள்ளார்


0 Comments