காதலன் மீது தாக்குதல் நடத்தி 17 வயது காதலியை காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹியங்கனை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி தனது 20 வயது காதலனுடன் குறித்த பற்றைக் காட்டுப் பகுதியில் இருந்த போது அந்த பகுதியூடாக சென்ற 5 இளைஞர்கள் காதலனை அச்சுறுத்தி அவர் மீது தாக்குதல் நடத்தி பின்னர் காதலியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய 12 மணித்தியாலத்திற்குள் சம்பவத்துடன் தொடர்புடைய 17 , 18 ,20 ,22 , 25 வயதுடைய 5 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட யுவதில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது


0 Comments