திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருகோணமலையின் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் சில குழுக்களால் திட்டமிடப்பட்டு போதைக்கு அடிமையாக்கப்படும் சம்பவம் இடம்பெற்று வருவதாக பெற்றோர்களும்,சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பல மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தினராலும் பொலிசாரினாலும் எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனினும் போதைக்கு அடிமையாக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

யுத்த காலத்தில்கூட இவ்வாறான நிலையை திருகோணமலை நகரம் எதிர்நோக்கவில்லை ஆனால் நல்லாட்சி நிலவுகின்ற இக்காலத்தில் இதுபோன்று மாணவர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்ற சம்பவம் இடம்பெறுகின்றமை கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பாரிய சக்தி செயற்படுவதாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
1.ஏன் இவ்வாறான சம்பவம் இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை?
2.ஏன் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்?
3.அடிமையாக்கப்படும் மாணவர்களின் மூலம் குறித்த குழு எதை சாதிக்க எதிர்பார்க்கின்றது?
1.ஏன் இவ்வாறான சம்பவம் இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை?
2.ஏன் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்?
3.அடிமையாக்கப்படும் மாணவர்களின் மூலம் குறித்த குழு எதை சாதிக்க எதிர்பார்க்கின்றது?
போதைப்பழக்கத்திற்கு மாணவர்களை அடிமையாக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருளுடன் பணமும் கொடுப்பதாக அறிய கிடைக்கின்றது. பின்னர் போதைப் பொருளுக்காக அவர்கள் எதையும், என்ன விலையையும் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதும் அக்குழுவிற்கு தெரியும்.
அத்துடன் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களில் ஈடுபட்ட பிரபல்யமான பாடசாலைகளைச் சேர்ந்த பல மாணவிகளும் இரகசியமான முறையில் சிறுவர் நன்நடத்தைப் பிரிவினரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இளைய சமுதாயம் சீரழிக்கப்பட்டு வருகின்றது இதனை தடுக்கின்ற பொறுப்பில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு,பிள்ளைகளுக்கு போதனைகளுடனான புத்திகளை பெற்றோர்கள் புகட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரது கடமையுமாகும் உங்கள் பிள்ளைகளின் நலனில் உங்களைத்தவிர எவரும் அக்கரைகாட்ட முடியாது. ஆகவே உங்களது பிள்ளைகளை பல மடங்கு அதிகமாக கண்காணியுங்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.


0 Comments