இந்தியாவி;ற்கு எதிராக ஓட்டங்களை குவிப்பது அவசியம் இதற்கு துடுப்பாட்டம் மிக முக்கியம் 200 அல்லது 250 ஓட்டங்களை பெற்றால் இந்தியாவுடனான டெஸ்ட்போட்டியில் வெல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் துடுப்பாட்டம் மிகவும் வலுவானது மற்றும் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடவேண்டும் என்பது குறித்து இலங்கை அணியினர் கவனம் செலுத்தி வருகின்றனர் அணி 400 ஓட்டங்களை பெற்றால் பந்துவீச்சாளர்களிற்கும் அது சாதகமாக அமையும் ஆனால் இலங்கையில் இடம்பெற்ற தொடரில் அந்த நிலை காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டியை இறுதிநாள் வரை கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இந்தியா எவ்வாறான ஆடுகளங்களை தயாரிக்கும் என்பதை எதிர்வுகூறமுடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


0 Comments