Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை மாணவர்கள் கவன ஈர்ப்பு

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சிபெற்றுவரும் ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று(16)ஒன்றுகூடிய ஆசிரிய உதவியாளர்கள் இந்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர்.
கோப்பாய், கொட்டகலை, அட்டாளைச்சேனை , காலி உணவட்டவன ஆகிய அரசினர் ஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர் உதவியாளராக கடமையாற்றும் ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய உதவியாளர்கள் இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
2015 .05.19 ஆம் திகதி முதல் உதவி ஆசிரியளர்களாக முதல் நியமனம் வழங்கப்பட்டு , தொடர்ந்து ஆசிரிய உதவியாளர்களாக கடமையாற்றுவது தமக்கு பெரும் மன உளைச்சலை தருவதாக ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களா நியமனம் வழங்க கோரி தமது கவனயீர்ப்பு கடிதங்களாக 3000 கோரிக்கை கடிதங்களை ஜனாதிபதி , பிரதமர் ,கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமக்கான கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும் இன்றைய வாழ்க்கைசெலவில் தமது வாழ்க்கையினை கொண்டுநடாத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும் ஆகவே தரம் இரண்டு தரம் 03வரையான வகுப்புகளுக்கு தங்களை ஆசிரியர்களாக உள்வாங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்ளும் நிலையில் தாங்கள் ஆசிரிய உதவியாளர்கள் என்ற நாமத்துடனேயே செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர் வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பாக விவாதிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் தமது கோரிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி தமக்கான நிரந்தர தீர்வினை பெற்று தர இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0103

Post a Comment

0 Comments