வவுனியா, வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதுடன் வேறு பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காலை பூஜைகளுக்காக ஆலய பூசகர் கதவை திறந்தபோதே பூட்டு உடைக்கப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





0 Comments