Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெரியகல்லாற்றில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

பெரியகல்லாறு, மற்றும் கிராமத்தை அண்டிய கிராமங்களின் நீண்டநாள் தேவையாக இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் கோலாகலமாக வியாழனன்று சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாகர் ஆலயத்தின் வண்ணக்கர் மூ.மன்மதராஜாவினால்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, மற்றும் டாக்டர் அ.உதயசூரிய, பொறியியலாளர் இ.கிருஷ;ணதாசன், அருட்திரு ஜெ.ஜெ.ஞானரூபன், வணபிதா ஜெரிஸ்டன் வின்சன்.அருட்திரு ஆ.பேரின்பராஜா, கிராம உத்தியோகத்தர் செ.இராதாகிருஷ;ணன் சகிதம் உரிமையாளர் மா.மாணிக்கராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயர் அலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையைத் தொடர்ந்து, அதிதிகள் வாண்ட் வாத்தியம் சகிதம் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு இரு மத ஆசீர்வாதங்களுடன் திறந்து வைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றப்பட்டு அதிதிகள் உரை இடம்பெற்றது.

களுவாஞ்சிக்குடி அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி சி.ஜே.டி விக்ரமரட்ணவும் உரையாற்றினார். இவர் தனதுரையில் சமூகமான சூழல் நிலவும் இக்காலத்தில்; அமைதியான மக்களையும் மதப் பற்றாளர்களையும் கொண்ட இக் கிராமத்தின் அபிவிருத்திக்கு இந்த எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரிதும் உதவியாக இருக்குமெனக் குறிப்பிட்டார்.

தலைமை வகித்துப் பேசிய உரிமையாளர் மா.மாணிக்கராஜா தான் 10 வருடங்களுக்கு முன்னர் கண்ட கனவு நிஜமாவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

பிரதமவிருந்தினர் வண்ணக்கர் மூ.மன்மதராஜா தனதுரையில,; கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் ஓடிய முதலாவது வாகனத்தின் உரிமையாளர் பெரியல்லாற்றைச் சேர்ந்தவருடையது என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையத்தின் வளர்ச்சிக்கு ஆலயம் பக்கபலமாக இருக்குமென்று குறிப்பிட்டார். விசேட அதிதி பொன் செல்வராசா தனதுரையில், இந்த எரிபொருள் நிலைய உரிமையாளர் வேறாக இருந்தாலும் இது இந்த கிராமத்தின் சொத்து என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இதை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் உங்களின் பங்களிப்பே அவசியம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிறப்பு அதிதயாகக் கலந்த கொண்ட பொறியியலாளர் இ.கிருஷ;ணதாசன் தனதுரையில், இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் உண்மையில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு திறக்கப்பட்டிருந்தால் இன்று இந்தக் கிராமம் நகரமயமாக்கலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும். அக்காலத்தில் வசதி படைத்தவர்கள் இதுபற்றி சிந்தித்திருந்தால் இந்தக் கிராமம் அபார பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கும்.

இக் கிராமத்தில் இருந்து உலகப் புகழ்பெற்ற மதன்ஸ் சாரங்கள் உற்பத்திசெய்யப்பட்டன. ஆவரின் மறைவிற்குப் பின் அந்த உற்பத்தி தொடரப்படவில்லை. இது கிராமத்திற்கு பாதகமே. அத்தொழில் தொடரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் மதன்ஸ் என்ற நன்மதிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு இங்கு பாரிய நவீன நெசவகம் உருவாக்கப்ட்டு கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இவ்வாறுதான் நாம் தவறுகள் விடுகின்றோம்.

எனினும் அதே குடும்பத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையம் புதிய தலைமுறையால் உருவாக்கப்பட்டிருப்பது உற்சாகமளிக்கின்றது. இந்த நிலையத்தின் செயற்பாடுகள், இதனோடு தொடர்புபட்டதாக விஸ்தரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் டாக்டர் அ.உதயசூரியா, கிராம உத்தியோகத்தர் செ.இராதாகிரஷ;ணன் ஆகியோர் உரையாற்றினர். திருமதி மாணிக்கராஜாவின் நன்றியுரையைத் தொடர்ந்து,  முதலாவதாக பொறியியலாளர் இ.கிருஷ;ணதாசன் காருக்கு உரிமையாளர் பெற்றோல் நிரப்பி வியாபாரத்தை ஆரம்பித்துவைத்தார். அதனைத் தொடர்ந்த விற்பனை அமோகமாக இடம்பெற்றது.

























Post a Comment

0 Comments