எரிபொருள் முகாமைத்துவ நடைமுறையில் நீண்டாகலமாக நிலவிய குறைபாடுகளே திடீர் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்தமை கண்டறியப்படுட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இது தொடர்பில் தெரிவிக்கையில்,
2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் நிலவிய பெற்றோல்; தட்டுப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையினை அக்குழுவின் தலைவர் கலாநிதி சரத் அமுணுகமவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
பெற்றோலிய வளங்களை மொத்தமாக களஞ்சியப்படுத்தும் செயன்முறையில் சில காலங்களாக நிலவிவருகின்ற மோசமான முகாமைத்துவமே குறித்த பெற்;றோல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு சரியாக பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகளை இனங்காண்பதற்காக அது தொடர்பில் தொழில்நுட்ப அறிவு கொண்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய பரிசீலனை குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வது உகந்தது எனவும் அதன் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று இவ்வாறான நிலைமையொன்று எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்காக மேலதிக களஞ்சியசாலையொன்றை ஸ்தாபித்தல், நவீன மொத்த எரிபொருள் தொகையினை முகாமைத்துவம் செய்யும் முறையினை பின்பற்றுதல் போன்ற சிபார்சுகளையும் அக்குழு முன்வைத்துள்ளது. குழுவின் சிபார்சின் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.


0 Comments