Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சு.க, ஐ.தே.க இணைந்து போட்டியிடாது

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளதாக வெளியான கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சில இடங்களில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கடந்த புதன்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.
ஆனால் அவ்வாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து போட்டியிட எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது. என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments