Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஓட்டமாவடியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில் ஓட்டமாவடி பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் 23 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 150 போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments