நியுயோர்க்கின் மான்ஹட்டன் பகுதியில் டிரக் ரக வாகனத்தால் பொதுமக்களை நபர் ஓருவர் தாக்கியதில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரக்கினை பயன்படுத்தி குறிப்பிட்ட நபர் பாதசாரிகள் மற்றும் தவிச்சக்கர வண்டியை பயன்படுத்திக்கொண்டிருந்தவர்கள்; மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
குறிப்பிட்ட டிரக் பாடசாலை பேருந்து ஓன்றுடன் மோதியதாகவும் அதன் பின்னர் அந்த நபர் வாகனத்திலிருந்து இரு துப்பாக்கிகளுடன் இறங்கியவேளை காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வேறு நாடொன்றிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த நபர் ஓருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 Comments