அமெரிக்காவின் டெக்ஸாசில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு பலரை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவாலயத்தின் போதகர் பிராங்பொமெரேயின் 14 வயது மகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிபிரயோகத்திற்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் சந்தேகநபர் பின்னர் வாகனமொன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் தேவாலயத்திற்கு வெளியே துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு உள்ளே நுழைந்த நபர் ஆராதனையில் ஈடுபட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
20 வயது வெள்ளையின இளைஞரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கி பிரயோகத்திற்கு முன்னர் அந்த இளைஞர் அப்பகுதியில் காணப்பட்ட எரிப்புபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நடமாடியதை பார்த்தாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
அதன் பின்னர் தேவாலயத்தின் வெளியே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அந்த இளைஞன் பின்னர் உள்ளே நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.


0 Comments